கடவுள் ஒருவரா? அல்லது கோடிக்கணக்கானோர் இருக்கிறார்களா?
கடவுள் ஒருவர்தான் என்று உலகின் பெரிய மதங்கள் கூறிக் கொன்டிருக்கையில், சித்தர் நெறியாகிய சீவநெறி எனும் இந்துமதம் கடவுள் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்று தெளிவாக வழங்கும் விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. 1992இல் நிகழ்த்தப்பட்ட கருத்துப் பரிமாற்ற சிந்தனை கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்து வேத விளக்கத்தின் நகல் இந்த வெளியீட்டில் முதலாக வழங்கப் படுகின்றது.
அடுத்ததாக இந்துமதம் அல்லது சித்தர் நெறி என்பது பற்றிய விளக்கக் கட்டுரை 1985இல் குருதேவர் அவர்களால் எழுதப்பட்டது இந்த வெளியீட்டில் உள்ளது.
இறுதியாக நீத்தார் அல்லது இறந்தவர் பற்றிய நால்வகை வாக்குகள் அதாவது கரு வாக்கு, குரு வாக்கு, தரு வாக்கு, திரு வாக்கு எனும் நான்கும் வழங்கப்படுகின்றது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.