இந்த இதழில் குருதேவர் ஞாலகுருவாக இருந்து தம்முடைய மாணாக்கர்கள் பலருக்கும் எழுதிய சிறிய சிறிய அஞ்சல்கள் சில உள்ளன. இவை சிறிய அஞ்சல்களாக இருந்தாலும் இவற்றில் மிகப் பெரிய தத்துவக் கருத்துக்களை இடையிடையே வழங்கியே குருதேவர் அஞ்சல்களை எழுதியிருக்கின்றார். குருபாரம்பரிய தத்துவக் கருத்து வாசகங்களை ஆங்காங்கே தமது அஞ்சல்களின் மூலம் வெளியிடுவதன் மூலம் குருதேவர் பாரம்பரிய இரகசியங்களாக இருந்தவை பலவற்றையும் போர்க்கால அடிப்படையில் வெளியிட்டுள்ளார் என்பதை இவற்றினைப் படிப்பதன் மூலம் அறியலாம்.
கீழ்க்காணும் அஞ்சல்கள் இந்த இதழில் உள்ளன:
இறுதியாக குருதேவர் அவர்களின் எழுத்தல்லாத, ஆனால் 64வது நாயனாராகிய சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தமது இயக்கத்தின் திருவண்ணாமலை மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையின் ஒரு பகுதி இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
முழுமையாக PDFவடிவில் படித்திட இங்கே தொடரவும்>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.