1985இல் குருகுலத்தில் நிகழ்ந்த பால்குடப் பெருவிழாவிற்குப் பின் தொடர்ந்த மண்டலப் பூசையின் விளைவாக குருதேவர் இந்து மறுமலர்ச்சி இயக்க நிலையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வழங்கிய அறிவுக் கொடையும் அருட்கொடையுமே இந்த இதழில் முதலில் உள்ளது. மற்றக் கட்டுரைகளாவன:
2. செயல்நலம் பாராட்டுத் திருவோலை
3. அன்பு விளக்கச் செயல் ஊக்கத் திருவோலை
4. கபாடபுரத்துக் கருவூறாரின் பரிகாரப் பூசை விளக்க மடல்
இந்த நான்கு கட்டுரைகளுக்குப் பின் குருதேவரின் சுற்றுப் பயணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அறிவிக்கைகள் இரண்டு உள்ளன.
இறுதியாக இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினைப் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் அடங்கிய ஒரு அறிவிக்கையின் பகுதி உள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.