1."அருட்கேணி நீர் மூன்றாவது குவளை" என்ற மற்றொரு தலைப்புடன் 43,73,81 ஆவணி மாதத்தில் (1980இல்) குருதேவர் அவர்களால் எழுதப்பட்ட சிறிய நூல் இந்த இதழில் முழுமையாக உள்ளது. இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்பது ஒரு பண்பாட்டு இயக்கம் என்பதனை விளக்கிடும் போது, நமது இயக்கம் ஒரு பண்பாட்டு நடவடிக்கை இயக்கம்தான் எனக் கூறி 'பண்பாட்டு அடிப்படையே மனித இனத்தைக் காக்கும், வளர்க்கும்' என்ற பேருண்மையை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் குருதேவர். இந்துமதக் கடவுள்கள் அனைவரும் அரசர்களாக, அரசியல் தலைவர்களாக, அரசியல் வித்தகர்களாக, ... வாழ்ந்தவர்களே என்பதால் இந்துமதமே ஓர் அரசியல் தத்துவமாகவே விளங்குகின்றது என்பதையும் எளிதாக விளக்கிடுகின்றார் குருதேவர். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் வாழும் எல்லா மதத்தினரையும் இந்துவாகவே குருதேவர் ஏற்றுக் கொள்கின்றார் என்பதையும் இந்த நூலில் விளக்குகின்றார்.
2. அடுத்ததாக குருதேவரின் அரிய செயல்திட்டத்தினை விவரிக்கும் அஞ்சல் வடிவக் கட்டுரை உள்ளது. இந்தக் கட்டுரையின் நகல் முழுமையாக கிடைக்கவில்லை. இருந்தும் குருதேவரின் செயல்திட்டம் என்ன என்பதை எளிதில் இந்தப் பத்திகளில் காண முடிகின்றது. உலகெங்கும் உருவாக்கப் போகும் அருட்பண்ணைகளுக்குத் தேவையான விதைகளையும், நாற்றுக்களையும் தமிழ்நாட்டை நாற்றங்காலாகக் கொண்டே உருவாக்க வேண்டும் என்ற செயல்திட்டம் இந்த அஞ்சலில் காணக் கிடைக்கின்றது.
3. இறுதியாக சித்தர்களின் சோதிடக்கலை பற்றிய தெளிவான கருத்துக்களை வழங்கிடும் ஒரு பக்க அறிவிக்கை உள்ளது.
இந்த வெளியீட்டினை முழுமையாக இங்கே படித்திடலாம் >>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.