தமிழுக்கு என்ன செய்யவேண்டும்?

தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படியெப்படிச் செய்ய வேண்டும்? எவ்வப்போது செய்ய வேண்டும்?

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்காகத் தம் உயிரையும் விடத் தயாராக இருப்பவர்கள் அனைத்து உலக மொழிவழி நாடுகளிலேயே தமிழ்நாடு ஒன்றில்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தமிழுக்காக உண்மையாக உழைக்கத் தயாராய் இருப்பவர்கள் என்றுதான் பொருள். தமிழுக்காக உழைப்பது என்பது என்ன எனத் தெரியாமல்தான் இன்றைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் தரும் வண்ணம் குருதேவர் எழுதிய கட்டுரையே இந்த மாத இதழில் முதன்மை பெறுகின்றது.

இவ்விதழில் உள்ள கட்டுரைகள்:

  1. சத்தி அண்டத்திலிருந்து தேவதேவி இம்மண்ணுலகு வருதல் பற்றிய குறிப்பு.
  2. தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் குருதேவர் எழுதிய கட்டுரையின் முன்னுரை.
  3. காரணோடைக்கு அருகில் உள்ள எருமைவெட்டி பாளையத்திற்கு சென்ற அருட்பயணம் பற்றிய கட்டுரை.
  4. பட்டாள வீரனுக்குப் பரிந்துரை மடல் என்ற தலைப்பில் தமிழுக்காக உழைப்பவர்கள் செய்ய வேண்டுவது என்ன என்பதை விளக்கும் கட்டுரை.
  5. நலம் பாராட்டுத் திருவோலையாக இந்து முன்னணியில் இருந்த தொடர்பாளர் ஒருவருக்காக குருதேவர் எழுதிய அஞ்சல்.
  6. இந்தியத் திருநாட்டில் அரசியல், சமுதாய, சமயத் தலைவர்களின் நெடிய தொலைநோக்குப் பார்வையற்ற செயல்களை விவரித்து குருதேவர் எழுதிய கருத்துக்கள்.
  7. அதர்வான வேதம் காண்டம் 1, மண்டலம் 8இல் உள்ள நாள்வாக்கிய மலர்கள் 21 முதல் 48 வரை.

 

மேலும் விரிவாகப் படித்திட.... >>>