இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > இந்துக் கோயில்களின் பூசைமொழி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துக் கோயில்களின் பூசைமொழி

"தமிழ்மொழியில்தான் தென்குமரி முதல் வட இமயம் வரை பூசை செய்ய வேண்டும்."
  1. இந்துவேத மாநாட்டிற்காகக் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்த இதழில் முதலாவதாக உள்ளன. இதில் முக்கியமாக தென் குமரி முனை முதல் வட இமயம் வரை உள்ள இந்துமதக் கோயில்களில் தமிழ்மொழியில்தான் பூசை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல தீர்மானங்களும் அவற்றிற்கான விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.
  2. இந்துவேத பாடசாலை மற்றும் இந்துவேத மாநாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் எளிய பரிகார முறைகள் பொது மக்களை மாற்று மத மந்திரவாதிகளின் பாதிப்புக்களிலிருந்தும், கிரகப் பாதிப்புக்களிலிருந்தும் பெருமளவில் காத்திடும். இந்த அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயல்பாடுகளின் மூலமே இந்துமதம் மக்களிடையே அன்றாட வாழ்விற்குப் பயன்பட்டிடும் என்பதை விளக்கிடும் செயல்நிலைக் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  3. இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் சேர்ந்தவர்களும் பல தவறுகளைச் செய்யக் கூடும். அப்படித் தவறு செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும், செய்யப் போகிறவர்களுக்கும் குருதேவர் வழங்கும் குருவாணை திருவாணை பெற்றதாக இந்தக் கட்டுரை மூலம் வழங்கப்படுகின்றது. இந்த அறிவுரை அஞ்சலே மூன்றாவதாக உள்ளது.
  4. அடுத்ததாக பொதுமக்களுக்கு இந்துவேத பாடசாலை பற்றி விளக்கி அனைவரையும் இதற்கு ஆதரவு தர வேண்டி விடுக்கப்பட்ட அறிவிக்கை உள்ளது.
  5. இறுதிப் பக்கத்தில் குருவாக்கியங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |