1. பதினெண்சித்தர் திருச்சபை என்ற பெயரில் குருதேவர் அவர்கள் பதிவு செய்திட்ட அறக்கட்டளையின் நோக்கங்கள், கொள்கைகள், செயல்திட்டங்கள் பற்றிய கட்டுரை முதலாவதாக உள்ளது.
2. சித்தரடியான்கள், சித்தரடியார்கள், சித்தரடியாள்கள் ஆகியோர் நிகழ்த்தும் மாதப் பருவபூசை பற்றி அருளாட்சி நாயகம் அவர்கள் வழங்கிய செயல்விளக்கங்கள் அடுத்ததாக உள்ளது.
3. தீச்சட்டித் திருவிழா அறிவிப்பு பதினெட்டம்மன் அருட்போர் அருட்படை வியூக அமைப்பாக அறிவிக்கப்பட்டு அதன் மூலம் அருட்கணிப்பு செய்வது பற்றியும், அருட்பணி ஆற்றுவது பற்றியும் விளக்கங்கள் வழங்கிடும் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
4. சிறுமுகையைச் சேர்ந்த அருட்குடும்பத்தின் வீரத் திருமகளுக்கு குருதேவரின் வாழ்த்து மடல் அடுத்து உள்ளது.
5. புதிய அறிமுகத்தார் ஒருவருக்கு தமிழ்நாட்டிற்கு இந்துமத வழியாகத் தொண்டாற்ற வருக என அழைப்பு விடுத்து குருதேவர் எழுதிய திருவோலை அடுத்து உள்ளது.
6, அச்சிட்ட அறிவிக்கையாக மெய்யான இந்துமதத்தைப் புரிந்து பயனடையுங்கள் என்று தலைப்பிட்டு எழுதிய விளக்கக் கட்டுரை அடுத்து உள்ளது.
7. 32வது புத்தர் கூறிய கருத்துக்களின் சாராம்சமாக 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய குருபாரம்பரியத்திலிருந்து எடுக்கப்பட்ட கருத்து இறுதியாக இந்த இதழில் உள்ளது.
இந்த இதழினை விரிவாகப் படித்திட இங்கே தொடரவும் ---->>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.