மக்கள் தொண்டு எது?
அருள்வழங்கி மக்களின் பாதிப்புக்களைப் போக்குதலே மக்கள் தொண்டு.
43,73,124ஆம் ஆண்டு மாசி மாத வெளியீடு
- இந்த இதழின் முதல் கட்டுரையாக வெண்ணந்தூரைச் சேர்ந்த புதிய அறிமுகத்தார் ஒருவருக்கு குருதேவர் எழுதிய விரிவான அஞ்சல். அருட்கோட்டங்களை நாடெங்கும் அமைத்தும், பகுத்தறிவுப் பூர்வமான சித்தர்நெறியை பரப்பிட மாணாக்கர்களைத் தயாரித்துச் செயல்படச் செய்தும் அருட்படை வீரர்களைத் தயாராக்கும் திட்டத்தை இந்த அஞ்சலில் விவரித்துள்ளார் குருதேவர்.
- அடுத்ததாக சித்த மருத்துவம் படித்து புள்ளம்பாடி எனும் ஊரில் மருத்துவராகப் பணிபுரியும் ஒருவருக்கு பதினெண்சித்தர்களுடைய பதினெட்டு வகையான வாசகங்களை வழங்கி அருட்பணி ஆற்றிட ஒப்புதல்களை குருதேவர் வழங்கிடும் அஞ்சல் உள்ளது.
- மூன்றாவதாக விரகாலூரைச் சேர்ந்த ஒருவருக்கு குருதேவரின் முதன்மை பற்றியும், குருவில்லாமல் அருள்நிலைகளைப் பெற முடியாது என்பதையும் ... விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் உள்ளது.
- நான்காவதாக உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரை மக்கள் தொண்டு என்பது எது என்பதனை விளக்குகின்றது. அதாவது மக்கள் தொண்டு என்பதே மக்களுக்கு பொருள் வழங்கிடுவதை விட அருள் வழங்கி அவர்களின் அனைத்து வகையான பாதிப்புக்களையும் போக்குவதுதான் என்றும் அந்த மக்கள் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு என்றும் விளக்கிடுகின்ற கட்டுரை இது.
- அடுத்ததாக இந்துவேதம் பற்றிய சில அரிய கருத்துக்கள் - ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது - வழங்கப்பட்டுள்ளது.
- இறுதிப் பக்கத்தில் இந்து வேத முழக்கங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.
இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட --->>>