"தமிழனுடைய இந்துவேதம் ஏன் சமசுகிருதத்தில் இருக்க வேண்டும்? வேதத்தின் தலைவன் சிவபெருமான் அனுப்பிய 63 நாய்ன்மார்களும், 12 ஆழ்வார்களும் சமசுகிருத மொழியில் பேசவில்லையே ஏன்?"
1) கருத்துப் பரிமாற்ற சிந்தனை அரங்கம் என்ற நிகழ்ச்சியின் போது குருதேவர் தந்த விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன. இந்து வேதம் உரைநடையில்தான் தமிழ்மொழியில் பதினெண்சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது; இந்து என்ற சொல் தமிழ்ச் சொல்லே!; இந்து வேதம்தான் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்த மணீசனை மனம் பெற்ற மனிதன் ஆக ஆக்கியது; ... போன்ற எண்ணற்ற விளக்கங்கள் இதில் தரப்பட்டுள்ளன.
2) தமிழ்நாட்டில் இந்துவேத விழிச்சியோ, இந்துமத எழுச்சியோ ஏற்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்து உள்ளது. இந்தக் கட்டுரையில் குருதேவர் அறுபதுக்கும் மேற்பட்ட தலைப்புக்களை வழங்கி, இந்தத் தலைப்புக்களின் கீழ் சிந்தனை அரங்குகளை நடத்திட வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார்.
3) இந்துமதம் உலகம் முழுவதும் பரவி இருந்த மதமே! என்பதை விளக்கி திருச்செந்தூர் அறநிலைய ஆட்சித் துறையைச் சேர்ந்த சொற்பொழிவாளருக்கு குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை இந்த இதழில் மூன்றாவதாக உள்ளது. சாமி கும்பிடும் பத்தர்கள் அனைவருமே இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள்தான் என்றும்; அனைத்துக் கோயில்களும் இ.ம.இ.யின் அலுவலகங்கள்தான் என்றும்; குருக்கள், பூசாறி, ஓதுவார் ... போன்ற அனைவருமே இ.ம.இ.யின் முன்னணித் தலைவர்கள்தான் என்றும் அறிவித்துத் தாம் இலைமறை காயாகச் செயல்படும் விதத்தினை குருதேவர் இதில் விவரிக்கின்றார்.
4) இந்துக்களுக்கு விளக்கம் என்ற தலைப்பில் குருதேவர் அருளிய வாசகங்கள் சில ஒரு பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.