43,73,125ஆம் ஆண்டின் ஆவணி மாத வெளியீட்டில் மடாதிபதிக் குழுவை ஆங்காங்கே எப்படி எப்படி எல்லாம் உருவாக்கி அருட்பணி புரிய வேண்டும் என்பதனை விளக்கி குருதேவர் மாணாக்கர்களுக்கு எழுதிய கடிதங்கள் உள்ளன.
ஈரோட்டைச் சேர்ந்த சித்தரடியாருக்கு (அருள்மிகு பழனியாண்டவர் சன்னிதானம்) அருட்பணி விரிவாக்கத் திட்ட மையத்தினை அமைத்து செய்ய வேண்டியவற்றினை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் முதலாவதாக உள்ளது.
அடுத்ததாக ஈரோடு கைலாய நாதர் சன்னிதானம் அவர்களுக்கு குருதேவர் பரிகார முறைகளை வழங்கியும், இந்து முன்னேற்றக் கழக உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்திச் செயலாக்கும் விதங்களை விளக்கியும் எழுதிய நெடிய அஞ்சல் உள்ளது. பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவை உருவாக்கி குழுவில் உள்ள அங்கத்தினர் அனைவரும் தங்கள் தங்களுடைய அருட்பட்டங்களைச் சித்தி செய்து கொள்ளத் தேவையான வழிகாட்டு முறைகளையும் இந்த அஞ்சலில் குருதேவர் வழங்கியுள்ளார்.
மூன்றாவதாக பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவில் உள்ள அருட்பட்டங்களுக்கு விளக்கங்களை வழங்கிய அறிவிக்கை எண்: 7777 உள்ளது.
பதினெண்சித்தர்களின் குடமுழுக்குப் பூசைமுறை என்ற நூலைப் பற்றிய அறிமுகத்தினை வழங்கிடும் சிறு குறிப்பு இறுதியாக உள்ளது.
இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>