தமிழர்கள் மறுசிந்தனை - 1

இந்துவேதம்! இந்துமதம்!! பிழைக்க! தழைக்க!! உழைக்க!!! அழைக்கிறோம்! அழைக்கிறோம்!! வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

  பதினெண்சித்தர் மடாதிபதி, பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அருளிய செயல் விளக்கத் திருவோலையின் முதற்பாகம் இந்த இதழில் முதலாவதாக உள்ளது. 1991 செப்டம்பரில் நிகழ்த்தப்பட்ட இந்துவேத மாநாட்டின் நிகழ்வுகள் அடிப்படையில் வகுத்தளிக்கப்பட்ட செயல்திட்டங்களை இந்த முதற்பாகத்தில் குருதேவர் விவரிக்கின்றார். கருவூறார் வார வழிபாட்டு மன்றம், சித்தர் கருவூறார் அருட்கோட்டம், சித்தர் கருவூறார் அருட்பணி விரிவாக்கத் திட்ட மையம் ஆகிய மூன்றினையும் தமிழகம் முழுவதும் அமைத்து செயலாக்கும் முறைகள் இதில் வழங்கப் பட்டுள்ளன. இதிலேயே முன்னோர் வழிபாட்டைப் பற்றியும், பருவபூசை வழிபாட்டைப் பற்றியும் விளக்கங்கள் உள்ளன.

 அடுத்ததாக, நமது தமிழகத்தின் 'தமிழாசிரியர்களின் சிந்தனைக்காக' என்ற தலைப்பில் தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் நல்ல வருங்காலத்தினை உருவாக்குவதற்காகச் செய்ய வேண்டியன என்ன என்பதை விளக்கி குருதேவர் எழுதிய கட்டுரை இடம் பெறுகின்றது.

  மூன்றாவதாக மும்முனைப் போர்முறையே நமது போர் வியூகம் என்பதை குருதேவர் வழங்கிய சுருக்க விளக்கக் கருத்துரை மூலம் வெளிப்படுத்தும் பகுதி ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது.

   இறுதிப் பக்கத்தில் 'வியூகம்' என்ற சொல்லின் பொருளை குருதேவர் விளக்கிய அருளியது உள்ளது.

 

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

 


 

Last edited: March 21, 2025, 16:45