இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் மாத வெளியீடுகள் அச்சிட்டு பலருக்கும் தபாலில் அனுப்பப் பட ஆரம்பித்தன. இந்த ஆண்டில் ஏப்பிரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள இதழ்களை இங்கே படிக்கலாம்.
கட்டுரைகளின் தலைப்புப் பட்டியல்:
ஞானாச்சாரியார் வரலாறு கட்டுரைகள்
அருளாட்சி அமைப்புப் பணி குருவாக்கியங்கள்
பெரியார் சொல்லடி நாயனார் - அருளுலக இருளகற்றிய அறிவுச் சுடரே பெரியார் ஈ.வெ.ரா.
சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா.
இந்துமதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம் - அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம்
அருட்போர் பற்றிய விளக்கம் - குருதேவர் தமது 58வது பிறந்த நாள் செய்தியில் கொடுத்த விளக்கம்.
22.1.81இல் வேடசந்தூர் பரஞ்சோதி மகான் எழுப்பிய கேள்விகளும், அவருக்கு குருதேவர் எழுதிய விளக்க அஞ்சலும்
ஆயுதப் புரட்சியல்ல, காகிதப் புரட்சியே - 1985இல் எழுதப்பட்ட கட்டுரை அஞ்சல்.
18.2.84இல் எழுதப்பட்ட அருட்படை வியூக அமைப்புச் சிந்தனை ஓலை (அழகுமலைப் பிள்ளைக்கு எழுதியது)
இ.ம.இ., அ.வி.தி. அருளாட்சி அமைப்புப் பணி அழைப்பு - வைகாசிப் பால்குட விழா பற்றிய கட்டுரை.
இந்துவேதமும், இந்துமதமும் அருளப்பட்ட முத்தமிழ் மொழி.
1979இல் சித்தரடியான் சத்தியமூர்த்திக்கு குருதேவர் எழுதிய இரு அறிவுரை அஞ்சல்கள்;
31/12/82இல் எழுதப்பட்டது: சித்தர்களின் ஏட்டில் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி பற்றியுள்ள குறிப்பு;
அன்புச் சேவுக! கட்டுரை அஞ்சல்;
1995 பொங்கல் வாழ்த்துச் செய்தி. 5-1-1995இல் எழுதப்பட்டது:
மார்கழி மாதம் பீட மாதம், சிறப்பான மாதம் என்பதற்கான விளக்கம்.
இந்துவேதத்தில் தை மாதத்தின் சிறப்புக்கள்.
10வது பீடாதிபதியின் குருபாரம்பரியம் - வட ஆரியர்கள் செல்வாக்கு பெற்ற விதம்,
சில அரிய சித்தர் நெறித் தத்துவங்கள் - மற்ற 48 வகைச் சித்தர்களின் நூல்களில் காணப்படாதவை.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.