இந்த இதழில் 1986இல் குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது மாணாக்கர்களுக்கு எழுதிய செயல்நிலை விளக்கத் திட்டங்கள் உடைய அஞ்சல்களின் நகல்கள் உள்ளன.
முதல் கட்டுரையில் இந்தியாவே இந்துமதத்திற்குரியது; இந்த இந்தியாவில் இந்துமதத்தின் அருளாட்சியை அமைக்க வேண்டும் என்று விளக்கங்கள் தந்து அருள்மிகு வீரமாகாளி சன்னிதானத்திற்கு எழுதிய அஞ்சல் உள்ளது.
இரண்டாவதாக, இயக்கம் என்பது தொடர்ந்து சேருபவர்கள் மட்டும் உள்ளதல்ல; சேருபவர்களும் அதைப் போலவே விலகுகிறவர்களும் இருப்பதுதான் இயக்கம் என்ற அரிய விளக்கம் தந்து எழுதப்பட்ட அஞ்சல் உள்ளது.
மூன்றாவதாக, நமது அடியான்கள் அனைவரும் அறிவுப் பூர்வமாக நடுநிலையில் நின்று எதையும் விமரிசிக்கத் தயங்கவே கூடாது என்று அறிவுரை வழங்கி குருதேவர் எழுதிய அஞ்சல் உள்ளது.
நான்காவதாக, காரணோடையில் கருகுலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன என்பதை விளக்கிய செய்தி உள்ள அஞ்சல் அமைந்துள்ளது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் முழுமையாகப் படிக்க இங்கே தொடரவும்....>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.