2015 - ஏப்பிரல்
மெய்யான இந்துமத ஆண்டு 43,73,116இல் சித்திரை மாத வெளியீட்டில் தரப்பட்டுள்ள கட்டுரைகள் விவரம்
1. சூரிய காயந்திரி மந்தர, மந்திரங்கள். - சூரியனை வழிபட உதவும் பூசைமொழிகளில் பிறமண்ணினர்கள் புகுத்திய குழப்பங்களை விளக்கிடுகின்றது.
2. குருநிலையும் ஒன்பது கோள் நிலையும் - வானியல், விண்ணியல், பஞ்சாங்கம் பற்றி விளக்கிடும் கட்டுரை.
3. ஆதிசங்கரர் அத்வைத வாதியா? - அத்வைதம் என்பது என்ன என்று விளக்கிடும் கட்டுரை.
4. அருளுலக ஆட்சி மொழி - தமிழை மறுத்து கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்கு விளக்கம் தரும் கட்டுரை.
5. இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கொள்கை விளக்கப் பாடல் - முதல் விசயாலயச் சோழனின் காலத்தில் தமிழகம் எங்கும் பரவலாகப் பயன்படுத்தப் பட்ட பாடல்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.