மார்கழி மாதம் (Dec-Jan)
இன்று நாட்டு வழக்கில் இராமாயணமும், இராமன் பேரும், இராமன் காலத்தில் வாழ்ந்த அனுமன் பேரும், ... பத்தியாளர்களாலும், இந்திய நாட்டு அரசியலாளர்களாலும் மிகவும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
ஆனால் இராமன் உண்மையில் வாழ்ந்த அரசன் தானா? அக்காலத்தில் வாழ்ந்த எண்ணற்ற அரசர்களை விட இராமன் எவ்வகையில் உயர்ந்தவன் ஆகின்றான்? அவன் வாழ்ந்த காலத்தில் மக்கள் பேசிய மொழி எது? அவன் வாழ்ந்த காலம் எது? இராமனைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு சுவையும் கற்பனை நயமும் ஊட்டப் பட்டது ஏன்? இராமன் வாழ்ந்த காலத்திற்கும் இன்றைக்கும் இடைப்பட்ட காலத்தில் என்னென்ன மாற்றங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன? அவற்றின் தாக்கங்கள் இந்த இராமன் வரலாற்றில் எப்படியெல்லாம் இருந்தன? இந்த நெடிய கால இடைவெளியில் இராமன் கதையை காத்து வந்தவர்கள் யார்? எதற்காகக் காத்து வந்திருக்கிறார்கள்? இப்போதும் இடைவிடாமல் ஏன் விளம்பரப் படுத்தி வருகின்றார்கள்?
இவை போன்ற வினாக்களுக்கு விடைகளை இந்த இதழிலிருந்து வரும் சித்தர் இராமாயணம் கட்டுரைகளில் காணலாம்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.