குருதேவர் அவர்களால் 1984இல் அச்சிட்ட புத்தகத்தின் நகலே இந்த இதழில் முதலில் உள்ளது.
"பொருளுலக முறைகேடுகளும், குறைபாடுகளும்,.... தனிமனிதக் கொள்ளைகளும், ஏதேச்சதிகாரங்களும், வெறிகளும் ..... அருளுலக இருளகற்றும் பணியால்தான் உடனடியாகத் தடுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டு அறவே எடுக்கப்பட்டிடும். இப்பணி புதிய அரசியல் ........ மாற்றங்களால் மட்டுமே சாதிக்கப்படும் என்பது தவறு! தவறு! தவறு..." என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திருவோலை அனைவருக்கும் விடுக்கப் படுகின்றது. குறிப்பாகப் கோவில் பூசாறிகளுக்கும், காப்பாளர்களுக்கும் சிறப்பான அழைப்பு விடுக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக பதினெண்சித்தர் மடம் என்ற அமைப்பைப் பற்றிய விளக்கங்கள் வழங்கும் கட்டுரை இடம் பெறுகின்றது. அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாகப் பதினெண்சித்தர் மடம் என்ன செய்கின்றது? மடாதிபதி மற்றும் மடத்தின் பணிகளும், பொறுப்புக்களும் என்னென்ன என்பனவற்றை விளக்குகின்ற கட்டுரை இது.
அடுத்ததாக தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குருபாரம்பரியம் 'தமிழின மொழி மத விடுதலை' என்ற தலைப்பில் உள்ளது.
இறுதியாக 'சமத்துவச் சகோதரத் தத்துவக் கூட்டுறவுச் சமுதாயம் அமைப்போம்' என்ற தலைப்பில் சித்தரடியார் திரு ஏ.இரவி அவர்கள் எழுதிய கவிதை அமைந்துள்ளது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் கட்டுரைகளைப் படித்திட...--->>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.