அருளுலகப் பயிற்சிகளுக்காகத் தக்க குருவை நாடிச் செயல்படும் மாணாக்கர்களில் சித்தர் ஒருவரை குருவாக ஏற்கும் மாணாக்கர்கள் சித்தர் அடியான் = சித்தரடியான் என்று அழைக்கப் படுவர். அப்படிச் சித்தர் ஒருவரை குருவாகப் பெற்று தன்னை சித்தரடியானாக ஆக்கிக் கொள்ளும் மாணாக்கர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை குருவாகிய சித்தர் கருவூறார் அவர்களே விளக்கும் கட்டுரைகளே இந்த வெளியீட்டில் உள்ளன.
1983இல் தமது மாணாக்கர்களின் போக்குகளையும் நோக்குகளையும் ஆராய்ந்து அவர்களுக்கு விளக்கம் தரும் விதமாக குருதேவர் ஐந்து கட்டுரைகளை "சித்தரடியான் நிலை விளக்கம்" என்ற தலைப்பில் வரைந்துள்ளார். அவை ஒவ்வொன்றும் தன்னை மாணாக்க நிலையில் இருத்தி அருளுலகப் பயிற்சிகளைப் பெற விரும்பும் அனைவரும் படித்தற்கு உரியதே. அவற்றுள் நான்கு கட்டுரைகளை இந்த வெளியீட்டில் காணலாம். ஐந்தாவது கட்டுரை முழுமையாக எழுதப்பட வில்லை என்பதனால் அதனை இந்தத் தொகுப்பில் வெளியிடவில்லை.
அருளுலகப் பயிற்சி என்பது மிகவும் கடுமையானது என்பதனால் அதற்கான கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் மிகவும் அதிகமானவையே. எனவேதான், அருளுலகப் பயிற்சிகளில் வெற்றி பெறுபவர்கள் மிக அரிதினும் அரிதாகவே உள்ளனர். அப்படி வெற்றி பெற்றவர்களை மட்டுமே சமுதாய மாற்றங்களை விளைவிப்பதற்காக குருவாக உள்ள சித்தர் கருவூறார் அவர்கள் ஒப்புதல் ஆணை தருவார்.
மேலும் விளக்கங்களை இந்தக் கட்டுரைகளை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும் >>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.