மேடைப் பேச்சிற்காக தயாரிக்கப்பட்ட இரு கட்டுரைகளும், இந்து மறுமலர்ச்சி இயக்க இளைஞர் பேரணியின் வேண்டுகோளும் இந்த இதழில் இடம் பெறுகின்றன.
1992இல் குருதேவர் அவர்களிடம் சித்தர் பட்டம் பெற்ற ஒருவர் குருதேவரிடம் கேட்டு மேடையில் பேசுவதற்காகத் தயாரித்த இந்த இரு கட்டுரைகளிலும் மிக எளிமையான பல விளக்கங்கள் கிடைக்கின்றன.
ஆண்டுக் கணக்கு என்பது எப்படி உருவாக்கப்படுகின்றது?, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அறிவுத் துறையினரால் ஏற்கப்பட்ட பல்வேறு ஆண்டுக் கணக்குகளைப் பற்றிக் குறிப்பிட்டு இறுதியாக இந்துமத ஆண்டுக் கணக்கினைப் பற்றி விரிவாக விளக்கும் கட்டுரை முத்லில் உள்ளது.
அடுத்ததாக வரும் கட்டுரையில் இந்துவேதம்தான் சிறந்த வேதம் என்பதற்கான காரணங்கள் தரப்படுகின்றன. இதில் கடவுள்கள் எப்படி உருவாகுகின்றனர் என்பதற்கான விளக்கங்கள் விரிவாக உள்ளன. முன்பு வாழ்ந்த சிறந்த மனிதர்களே, சாதனையாளர்களே கடவுள்களாக வழிபடப் படுகின்றனர் என்பதை மிக எளிமையாக விளக்குகின்ற கட்டுரை இது.
மூன்றாவதாக உள்ள கட்டுரையில் 'சித்தர் நெறி எனும் இந்துமதம்' பற்றிய சுருக்க விளக்கங்கள் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளன.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட ...--->>>
PDF வடிவில் கட்டுரைகளைப் படித்திட...--->>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.