இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆங்கிலம் மற்றும் வடமொழிகள் பற்றிய கொள்கை விளக்கங்கள்.
கி.பி. 1772இல் மூன்றாவது முறையாகக் கலியுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் மொழிக் கொள்கை விளக்கங்கள் இந்த பதிவில் உள்ள கட்டுரைகளில் வழங்கப் படுகின்றன. கலியுகத்தில் முதலாவதாக கி.மு. முதலாம் நூற்றாண்டில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.) பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களால் துவக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கி.பி 8ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்த இ.ம.இ. பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களால் துவக்கப்பட்டது.
அவ்வக்காலச் சூழ்நிலைகளுக்கேற்ப இந்து மறுமலர்ச்சி இயக்கம் தனது கொள்கைகளை விளக்கமாக வழங்குவது பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் மரபு. அதற்கேற்பவே பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் திருத்தோற்றம் எடுப்பதற்கு முன்னரே அவசர அவசியத் தேவைகளினால் சித்தர் ஏளனம்பட்டியார் அவர்களால் இந்த இ.ம.இ. ஆரம்பிக்கப்பட்டது. அவரே முதலாவது இ.ம.இ. தலைவராகச் செயல்பட்டார். அவருக்குப் பின் சித்தர் காக்கையர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்கள் இ.ம.இ. தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளின் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப இருவரும் வழங்கிய சமசுக்கிருத மொழி, இந்தி மொழி, ஆங்கில மொழி பற்றிய இ.ம.இ.யின் கொள்கை விளக்கக் கட்டுரைகள் இந்த இதழில் உள்ளன.
முதலிலும் இறுதியிலும் வேறு இரு கட்டுரைகள் உள்ளன. முதலில் விரகாலூர் அடிகளார் அவர்களுக்காக வழங்கப்பட்ட நட்பு நாடும் திருமடல் உள்ளது. இறுதியில் கவிஞர் ஆண்டான் என்ற புனைப்பெயரில் சித்தர் காக்கையர் வழங்கிய 'தமிழ் வழி இன விடுதலை' என்ற கவிதை உள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.