1981இல் குருதேவர் அவர்கள் எழுதிய 'வளரும் புரட்சி வரலாறு' என்ற தலைப்பிட்ட அஞ்சல் வடிவக் கட்டுரை இந்த இதழில் முதலில் இடம் பெறுகின்றது. நாம் என்ன செய்தால் தாழ்ந்து கிடக்கின்ற தமிழகத்தை மேம்பாடு அடையச் செய்ய முடியும் என்ற கருத்தினை இந்தக் கட்டுரையில் குருதேவர் வழங்குகின்றார்.
அடுத்ததாக வரும் கட்டுரையில் மிக அரிதான குருபாரம்பரிய வாசகங்கள் இருக்கின்றன. இவற்றை தமது மாணாக்கர் ஒருவருக்கு எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரையில் அந்த மாணாக்கரின் யோகத்தை அடிப்படையாகக் கொண்டு இடையிடையே குருதேவர் வழங்கியுள்ளார்.
தாந்தரீகப் பூசை என்றால் என்ன என்பதே தெரியாமல் பலரும் Tantrik என்ற சொல்லைப் பயன்படுத்தி குழப்பி வரும் நிலையில் குருதேவர் தாந்தரீகப் பூசை என்பதே பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மட்டுமே செய்ய முடியும் என்பதை விளக்கி அதன் பொருளாக சிலவற்றை இந்தச் சிறிய கட்டுரையில் வழங்குகின்றார்.
அடுத்த கட்டுரையில் குருவானவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை சில வாக்கியங்களில் தெளிவாக வழங்குகின்றார் குருதேவர். குருநிலையில் இருக்க வேண்டும் என்பவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று குருதேவர் விளக்கியுள்ளார்.
இறுதியாக வைகாசி மாத முழுநிலவுப் பூசையாகிய ஞானம் வழங்கும் பருவபூசையில் அனைவரும் முழக்க வேண்டிய முழக்கங்கள் உள்ளன.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட ... --->>>
PDF வடிவில் கட்டுரைகளைப் படித்திட..--->>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.