குருதேவரின் தந்தையார் சித்தர் காகபுசுண்டர் M.P.பிள்ளை அவர்கள் வழங்கிய இந்துமதம்-ஹிந்துமதம் பற்றிய கருத்துக்கள். - ஹிந்துமதம் பிறாமணர்களுடையது; ஆனால் தமிழர்களுடைய மெய்யான இந்துமதத்தில் கட்டுக்கதைகள், கற்பனைகள், முதலாளித்துவ சுரண்டல்வாதங்கள், ... ஆகியன புகுத்தப்பட்டு பிறாமணர்களின் ஹிந்துமதம் உருவாக்கப்பட்டது. செயல்படும் விதங்களில் ஹிந்துமதத்தையும், இந்துமதத்தையும் எப்படி பிரித்து உணருவது என்பதை விளக்கும் கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் அருளிய தமிழின மொழி மத விடுதலை பற்றிய கருத்துக்கள் அடுத்ததாக உள்ளன.
செயல் விளக்கத் திருவோலையாக மதுரைச் சித்தரடியான் ஒருவருக்கு குருதேவர் வழங்கிய விரிவான அறிவுரைகள் அனைத்து சித்தரடியான்களுக்கும், சித்தரடியாள்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரை மூன்றாவதாக உள்ளது.
சத்தி அண்டத்துத் தேவதேவியின் அருளாட்சிப் பரிந்துரையின்படி வழங்கப்படும் நிறுவன நிருவாக அதிகாரிகள் பற்றிய குருவாணை அடுத்ததாக உள்ளது.
இந்து மறுமலர்ச்சி இயக்க மாநிலச் செயலாளருக்கு குருதேவர் விடுத்த செயல்விளக்கத் திருவோலை நான்காவதாக உள்ளது.
இறுதியாக குருதேவர் அருளுரையாக வழங்கிய குருபாரம்பரிய வாசகங்கள் இரண்டு உள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.