"... எந்தத் தமிழனும் தன்னுடைய கடவுளுக்கு தனக்குப் புரியாத அன்னிய மொழியில் பூசைகள் செய்யப்படுவது ஏன்? என்று சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்...!"
இந்த இதழில் "அருட்போர் ஆயத்தப் பணி அருளாணை - 13" என்ற தலைப்பில் சித்தரடியான் ஒருவருக்கு எழுதிய நெடிய அஞ்சல் வடிவக் கட்டுரை முழுமையாக இடம் பெறுகின்றது. இந்தக் கட்டுரையில் பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவில் இடம் பெறும் அருட்பட்டத்தார்களின் அருட்பட்டங்களுக்குரிய விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சி பெற்ற நிலையான இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினை விரிவாக விவரித்து; இந்த இ.மு.க. எனும் அமைப்பு செய்ய வேண்டிய பணிகள் பற்றி விளக்கங்கள் குருதேவர் வழங்குகின்றார். இந்துமத ஆட்சி மீட்சிக்காகச் செய்ய வேண்டிய அனைத்து செயல்திட்டங்களையும் குருதேவர் விளக்கிடுவதுடன் அறிவிக்கை எண் 7777இன் விளக்கங்களையும் குருதேவர் தருகின்றார்.
இந்த நெடிய கட்டுரைக்குப் பின் ஒரு சிறிய கட்டுரையாக "இந்துவேதம் தமிழ்மொழியில் இருக்கிறது; உலக வேதம்தான் இந்துவேதம்" என்ற தலைப்பில் சிறிய விளக்கம் இந்த இதழில் உள்ளது. இந்துவேத விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதின் அவசியம் விளக்கப் படுகின்றது.
இந்த இதழினை விரிவாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.