43,73,125ஆம் ஆண்டின் புரட்டாசி மாத வெளியீடு.
சென்ற இதழில் வெளிவந்த அறிவிக்கை எண்: 7777 என்பதனை துணையாகக் கொண்டு, சாதனமாகக் கொன்டு மக்களிடையே கருத்துப் புரட்சியை விளைவிக்க வேண்டும் என்பதனை விளக்கி குருதேவர் காரைக்குடி அடியான்களுக்கு எழுதிய அஞ்சல் முதலாவதாக உள்ளது.
அருட்போர் வியூக நாயகமாக அறிவிக்கப்பட்ட சித்தரடியார் அவர்களுக்கு நாடு முழுவதும் கருத்துப் புரட்சியை அறிவிக்கும் முறையை குருதேவர் விவரித்து எழுதிய விரிவான செயல்விளக்க அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
பசணை மடங்களினால் மக்களுக்கு எந்தவிதமான அருட்பணியையும் செய்ய முடியாது; அதே நேரத்தில் அருட்பணி விரிவாக்கத் திட்டம் மிகவும் போற்றற்குரிய பணிகளை மக்களுக்காகச் செய்யும் என்பதால், பசணை மடத்தினை நடத்துவதை மாற்றி அருட்பணி விரிவாக்கத் திட்டமாகச் செயல்படக் கூறி காஞ்சிபுரத்திலிருந்து அறிமுகமான ஒருவருக்கு குருதேவர் எழுதிய அஞ்சல் அடுத்து உள்ளது.
அடுத்து உள்ள கட்டுரையில் இந்துவேதம் பரப்பும் நாயகத்திற்கு குருதேவர் விரிவான செயல்திட்ட அஞ்சல் மூலம் மதுரை மாநகருக்குள்ளும், தென்மண்டலத்திலும், கிழக்கு மண்டலத்திலும் இயக்கத்தை அறிமுகப்படுத்தக் கூடிய திட்டங்களை விளக்குகிறார்.
இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.