மாசி மாதம், 43,73,125ஆம் ஆண்டு.
1. கும்பகோணம் மாசி மகத் திருவிழாவின் போது அங்கே அருட்பணி ஆற்றிய பின் குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை இந்த இதழின் முதல் கட்டுரையாக உள்ளது. குருதேவரின் மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் ஆற்றல் மிக்க தலைவராகத் தயாராக வேண்டும் என்று கருத்து விளக்கங்கள் வழங்கி எழுதப்பட்ட கட்டுரை இது.
2. கும்பகோணம் தாராசுரத்தில் குருதேவர் அருட்பணியாற்றிய போது துணை நின்ற மாணாக்கருக்கு எழுதிய இந்த கடிதத்தில் குருதேவர் அவர்கள் இந்த நாட்டில் உள்ள அமைப்புக்கள் போட்டாபோட்டியிலும், சண்டை சச்சரவுகளிலும் காலம் கடத்தி தங்களுடைய முதன்மையான நோக்கங்களைத் தவற விட்டு விடுகிறார்கள் என்பதை விளக்கி; அதன் மூலம் நமது நாட்டின் அமைப்புக்ள், கழகங்கள், இயக்கங்கள், கட்சிகள் அனைத்தையும் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டியதின் அவசியத்தினை வலியுறுத்துகிறார்.
3. மெய்யான தமிழ் உணர்வுடன் தம்மைத் தொடர்பு கொண்ட ஆர்வலர் ஒருவருக்கு குருதேவர் எழுதிய கடிதத்தில் பட்டிதொட்டி, குக்கிராமங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் எங்கணும் தமிழனை எழுச்சி பெறச் செய்வதற்கும், பயிற்சி செய்து உயர்ச்சி பெறுவதற்கும் அழைப்பு விடுக்கும் பணியில் ஈடுபட வருமாறு அவரை அழைத்து விளக்கங்கள் வழங்குகிறார்.
4. அடுத்ததாக உள்ள கடிதத்தில் இராமகிருட்டிண ஞானயோகத் தபோவனம் அமைத்துச் செயல்படும் துறவிகளுக்கு கடவுள்களின் வகைகளைப் பற்றிய விளக்கங்களைத் தந்து சுருக்கமாக குருதேவர் எழுதியுள்ளார்.
5. இறுதிப் பக்கத்தில் கடல் போன்ற இந்துவேதம் பற்றியும், அதிலிருந்து எடுக்கப்பட்ட உப்புப் போன்ற இந்துமதம் பற்றியும் குருதேவர் தமது அருளுரையில் வழங்கிய கருத்து உள்ளது.
இந்த இதழினை முழுமையாகப் படிக்க இங்கே தொடரவும்->>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.