இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > கபாடபுரத்துக் கருவூறார் வருகை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

கபாடபுரத்துக் கருவூறார் வருகை

குருதேவரும் கபாடபுரத்துக் கருவூறாரும் தலைமைப்பீடத்தில் உரையாடுதல்
  1. ஏழாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகிய கபாடபுரத்துக் கருவூறார் அவர்கள் குருதேவரைக் காண தலைமைப்பீடம் வந்திருந்த போது, அவருடன் குருதேவர் நிகழ்த்திய உரையாடலை அப்படியே குருதேவர் கூறியதன் பதிப்பு இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை மூலம் குருதேவர் தமக்கு முந்தைய பீடாதிபதிகளுள் ஒருவருடன் தம்முடைய முயற்சிகளையும், இனி எந்தவிதத்தில் செயல்பட வேண்டும் என்று அவரிடமே கருத்துக் கேட்கும் பாணிகளையும், அவரிடம் உதவி கேட்கும் விதங்களையும் நன்கு தெரிந்து கொள்ளலாம்.
  2. மதுரைச் சித்தரடியான் ஒருவருக்கு குருதேவர் அவர்கள் தம்மைச் சந்தித்துத் தமக்குத் துணையாகச் செயல்படும் அருளுலகச் சத்திகளுள் ஒருவரான உக அற நாயகி வழங்கிய பரிந்துரைகளை எழுதித் தந்த அஞ்சல் அடுத்ததாக உள்ளது. இந்த அஞ்சலிலேயே திருப்பரங்குன்றம் சுடலை அருட்கோட்டம் பற்றி மக்களுக்கு அறிவிப்பதற்கான அறிவிக்கை உள்ளது.
  3. வேம்படிதாளச் சித்தரடியான் ஒருவர் நிகழ்த்திய அருட்பணி விரிவாக்கத் திட்டச் சுற்றுப்பயணத்தை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு குருதேவர் அ.வி.தி. சுற்றுப்பயணம் தொடர்பானதாக வழங்கிய அறிவுரைகள் இந்த அஞ்சலில் உள்ளது.
  4. அருளுலகம், அருள்வாழ்வு, அருளுலக வாழ்வு, அருளுலக வாழ்வியல் என்ற சொற்களை விளக்கும் விதமாக இருக்கு வேதம் காண்டம்:1 மண்டலம்: 2 நாள் உரைக்கோவை வாசகங்கள் 1 முதல் 48 வரை உள்ள வாசகங்கள் இறுதியாக உள்ளது.
  5. பின் உள் அட்டைப்பக்கத்தில் சில குருபாரம்பரிய வாசகங்கள் குருதேவர் சித்தரடியான் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தியவை உள்ளன.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட --->>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |