1) இந்த இதழின் தலைப்புக் கட்டுரையாக உள்ள "தாந்தரீகப் பூசை விளக்கம்" என்பது குருதேவரால் சுருக்க விளக்கமாக தாந்தரீகப் பூசையைப் பற்றி வழங்கப்பட்டது. இதில் தாந்தரீகப் பூசை என்பது முழுக்க மறையானதே அன்றி வெளிப்படையாக எதுவும் கூறப்பட முடியாது என்பதையும்; ஆனால், இந்தப் பூசையின் நோக்கமும் பயனும் அனைவரும் அறிந்து கொள்ளலாம் என்பதையும் குருதேவர் விளக்கி அருளுகின்றார்.
2) அடுத்ததாக அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் (அ.வி.தி.) கீழ் செயல்படும் செயல் வீரர்களைத் தயாரிக்கும் பயிற்சி முகாம் பற்றிய அறிவிப்பு வழங்கப்படும் கட்டுரை உள்ளது. இதில் அ.வி.தி. செயல்வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை என்ற அரிய பட்டியலும் உள்ளது.
3) மூன்றாவதாக கடந்தப்பட்டியில் தயாராகி வரும் ஒரு சித்தரடியான் பொருட்டு குருதேவர் வழங்கிய குருபாரம்பரிய வாசகங்கள் அடங்கிய அஞ்சல் உள்ளது.
4) நான்காவதாக சிறுமுகை அடியான் ஒருவருக்கு எழுதிய அஞ்சல் உள்ளது. இதில் நமது மதம்தான் நம்முடைய வரலாறுகளைக் காத்துத் தரும் என்பதை விளக்குகின்றார் குருதேவர்.
5) பிரேமை என்று நடைமுறையில் வழங்கப்படும் சொல்லின் பொருளையும் காரண விளக்கங்களையும் குருதேவர் நேரடியாக விளக்கும் குறிப்பு ஐந்தாவதாக உள்ளது.
6) இறுதியாக தமிழனுக்கென்று உள்ள சிறப்புக்களை குருதேவர் சுற்றுப்பயணத்தின் போது கூறியதாக கூறிய விளக்கங்கள் உள்ளன.
இந்த வெளியீட்டை முழுமையாகப் படித்திட ---->>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.