இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > மெய்யான இந்துமதப் பயிற்சிப்பள்ளி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மெய்யான இந்துமதப் பயிற்சிப்பள்ளி

மெய்யான இந்துமதப் பயிற்சிப் பள்ளியே குருகுலம்
  1. "மெய்யான இந்துமதப் பயிற்சிப் பள்ளியே பதினெண்சித்தர் மடத்தின் குருகுலம்" - கொட்டாம்பட்டியை அடுத்த காரியேந்தல்பட்டியில் உருவாக்கப் பட்டுள்ள குருகுலமே பதினெண்சித்தர் மடத்தின் குருகுலம். அந்தக் குருகுலத்தின் காப்பாளருக்கு குருதேவர் மெய்யான இந்துமதப் பயிற்சிகளை வழங்கிடும் பள்ளியாக குருகுலம் இருந்திட வேண்டும் என்று வலியுறுத்தி எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக உள்ளது.
  2. "இராசிபுரம் தேர்தல் களத்தில் இந்து மறுமலர்ச்சி இயக்க அடியானின் அநுபவம்" - இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பாக இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் நின்ற வேட்பாளருக்காக செயல்பட்ட அடியான் ஒருவர் தமது அநுபவத்தை விளக்கிடும் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  3. "ஒரு முயற்சி! அதில் வெற்றி! அதனால் மகிழ்ச்சி...?!!!" - குருதேவரின் ஒரு மாணாக்கர் குருவின் ஆணை பெற்று மற்றொரு மாணக்கருக்காக ஏற்றுச் செய்த பரிகாரப் பூசையின் வெற்றியினை அந்தப் பரிகாரத்தைச் செய்தவரே விளக்கிடும் அஞ்சல் மூன்றாவதாக உள்ளது.
  4. "வாழ்த்துத் திருவோலை" - கோவையைச் சேர்ந்த புதிதாக அறிமுகமான ஒருவருக்கு குருதேவர் எழுதிய நெடிய விளக்கக் கட்டுரை.
  5. "நலம் நாடும் திருவோலை" - விரகாலூரைச் சேர்ந்த சித்தரடியாளுக்கு குருதேவர் எழுதிய விளக்க அஞ்சல்.
  6. "அருளாட்சி அமைப்புப் பணித் துவக்கத்தின் இரகசியங்கள்" - குருதேவரின் அருளாட்சி அமைப்புப் பணிக்காக எண்ணற்ற அருளுலகத்தார் உதவிட முன் வந்த வண்ணம் உள்ளதை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சலின் ஒரு பகுதி.
  7. "ஞானம், அருள் என்பதின் விளக்கம்" - ஞானம் என்றால் என்ன? அருள் என்றால் என்ன? என்பனவற்றை விளக்கி குருதேவர் வழங்கிய குருபாரம்பரிய வாசகமும் அதன் விளக்கமும் இறுதியாக உள்ளது.

 

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட ===>>>

 

Last edited: November 21, 2022, 12:05
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |