(1) இந்த மாதத்தின் தலைப்புக் கட்டுரையில் சுடலைப் பூசைக்கான விளக்கங்களையும், சுடலைப் பூசையின் பயன்களையும் விளக்குவதுடன், சுடலைப் பூசையின் போது நம்மவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் குருதேவர் வழங்கியுள்ளார். பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மட்டுமே தாங்கள் தோன்றும் காலங்களில் தம்மை நாடி வருவோர்க்கு சுடலைப் பூசை பற்றிய விளக்கங்களை எளிதாக வழங்கிடுகின்றார்கள். பிறப்பாசையையும் (பிறப்பு + ஆசை), இறப்பச்சத்தையும் (இறப்பு + அச்சம்) வென்று தருவதே சுடலைப்பூசை என்று குருதேவர் வழங்கிடும் குருபாரம்பரிய வாசகமே இதன் முக்கியத்துவத்தை விளக்கிடும். தாந்தரீகப் பூசை போல் இந்தச் சுடலைப் பூசை முழுமையாக மறைக்கப்பட்ட பூசை அல்ல.
(2) குருதேவர் தமது அருட்பட்டங்களைச் செயலுக்குக் கொண்டு வருவதற்காகச் சந்தித்த பல விதமான போராட்ட நிலைகளை மனம் விட்டு குருதேவரே விவரித்து எழுதிய அஞ்சல் இரண்டாவதாக உள்ளது.
(3) நமது பணியே தமிழ் நாட்டிற்குள்ளும், பின்னர் தென்னிந்தியா, இந்தியா, உலகெங்கும் அருட்பயிர் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளரப் பாடுபடுதல் என்பதை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
(4) இறுதிப்பக்கத்தில், இருக்கு வேதத்தின் காண்டம் 1, மண்டலம் 2இல் உள்ள சில நாள் உரைக்கோவை வாசகங்கள் உள்ளன.
இந்த இதழினை முழுமையாகப் படித்திட --->>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.