1. சித்தர் நெறி ஆர்வலர் ஒருவருக்கு விளக்கம் தரும் முகமாக குருதேவர் அவர்கள் எழுதிய அஞ்சலின் முதன்மைக் கருத்தே இந்துமதம் ஒரு சமூக விஞ்ஞானமே என்பதையும், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கும் சித்தர் நெறியே இந்துமதம் என்பதையும் விளக்கிடும் கட்டுரை முதலாவதாக உள்ளது.
2. அடுத்ததாக சமயக் குரவர் நால்வர் சன்னிதானம் அவர்களுக்கு குருதேவர் வரைந்த மடல் உள்ளது. இதில் குருதேவர் அவர்கள் தமது பணி நிலைகள் பற்றியும், தமது மாணாக்கர்களிடம் தம்முடைய எதிர்பார்ப்புக்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
3. மூன்றாவதாக சிறுமுகைச் சித்தரடியாருக்கு குருதேவர் அவர்கள் வரைந்த விளக்க மடல் உள்ளது. இந்த மடலில் தமிழர்களுடைய மதம் பற்றிய இன்றைய கற்பனைகளைச் சாடியும், தமது கருத்துக்களை மக்களிடையே விளக்கி உரைத்திட இராமகிருட்டினர் பரம அம்சரின் விவேகானந்தர் போல் சிலராவது தயாராகிடல் வேண்டும் என்றும் விளக்கி எழுதியுள்ளார்.
4. அடுத்ததாகத் தஞ்சைப் பெரிய கோயில் பற்றி 1990இல் குமுதம் வார இதழில் வெளியான கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்தும், விளக்கங்கள் வழங்கியும் பதினெண்சித்தர் மடத்தின் தலைமைப் பீடத்திலிருந்து குருதேவர் எழுதிய அறிவிக்கை உள்ளது.
5. அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்படப் போகும் மாணாக்கர்கள் பிறருக்கு மந்திரிக்கத் தயாராகிட வேண்டி பூசையில் கூற வேண்டிய வாசகங்கள் உள்ளன.
6. இறுதியாக தமது மாணாக்கர் ஒருவரின் திருமணத்திற்காக குருதேவர் எழுதி அச்சிட்டு வழங்கிய திருமண வாழ்த்துப் பரணி உள்ளது.
இந்த இதழினை விரிவாகப் படித்திட இங்கே தொடரவும் ----->>>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.